Breaking News

FACT CHECK பெட்ரோல் பங்கில் கொரானா பரப்பிய இஸ்லாமியர் வீடியோ உண்மையா? மேலும் விவரங்களுக்கு

அட்மின் மீடியா
4
ஒரு பெட்ரோல் பம்பில் ஒரு முஸ்லீம் மனிதர் பணத்தை வீசி  கொரோனா வைரஸ் தொற்றுநோயை பரப்புகின்றார் என ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்கின்றார்கள் 




அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

அந்த செய்தி பொய்யானது 

யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன


அந்த வீடியோவில் உள்ள சம்பவம் குஜராத்தில் நடந்தது

அவர் கொரானா பரப்பவேண்டும் என்று பணத்தை விடவில்லை

அவர் குஜராத்  வல்சாத்தில் பகுதியில் வசிக்கும் முகமது யூசுப் இலியாஸ் ஷேக் என்பவர் 

அவருக்கு வலது கையில் விபத்தினால் பாதிக்கபட்டுள்ளது

அந்த சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலானதை தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளர்கள்  இது குறித்து அவர் வெளியுள்ள வீடியோவில்

கடந்த ஏப்ரல் 22ம் தேதி   நான் காலையில் தபேலுக்குப் புறப்பட்டேன்,  வழியில் பெட்ரோல் நிரப்பு ஒரு எரிவாயு நிலையத்தில் நிறுத்தினேன். நான் நெடுஞ்சாலையில் சவாரி செய்வதால் நான் கண்ணாடி மற்றும் முகமூடியை அணிந்திருந்தேன்.

2009 இல் ஒரு விபத்து நடந்து , அதில் என் வலது கை மிகவும் சேதம் அடைந்து. கையில் இயக்கம் உள்ளது, ஆனால் என்னால் அதை திறம்பட பயன்படுத்த முடியாது.  என் கையில் இருந்து விழுந்தபோது கூட நான் உணரவில்லை. ”


நீங்கள் வீடியோவை கவனமாகக் கவனித்தால், நான் என் இடது கையைப் பயன்படுத்தி என் பாக்கெட்டில்  பணம் வைத்தேன் . இந்த நேரத்தில் வலது கையில் என் விரல்களுக்கு இடையில் சிக்கி  இருந்த பணம் நழுவி தரையில் விழுந்ததை என்பதை நான் உணரவில்லை. ”

என் முதுகெலும்பில்  சில நேரங்களில் வலி ஏற்படும். எனவே ஒவ்வொரு 2-3 மாதங்களுக்கு ஒரு சோதனைக்காக நான் தபேலில் உள்ள மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். 

ஊரடங்கு காலத்தில் வல்சாத்  நவ்சாரிக்கு பயணம் செய்ததாக என் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. ”

மேலும் எனக்கு கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றார்கள் எனக்கு கொரானா  இல்லை என்பது உறுதியானது

எனது வலது கையில் பக்கவாதம் பற்றி நான் போலீசாரிடம் சொன்னபோது, நான் அந்தக் குறிப்பை தற்செயலாக கைவிட்டதை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

பெட்ரோல் பம்பிலிருந்து வந்தவர்களும் காவல் நிலையத்திற்கு வந்தனர். அவர்கள் என் கையைப் பார்த்தபோது, அது ஒரு தவறு என்று அவர்கள் புரிந்துகொண்டார்கள். 

எனவே பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள் மேலும் எங்கோ தற்செயலாக நடந்த ஒரு செயலை அவர் இஸ்லாமியர் என்ற காரணத்திற்க்காக வேண்டும் என்றே செய்தார் என்பதை ஒப்புகொள்ளமுடியாது மேலும் ஒரு நபர் தனக்கு கொரானா இல்லாமல் மற்றவர்களுக்கு கொரோனா வைரஸை எவ்வாறு ‘பரப்ப முடியும்’? சிந்திக்கவேண்டும் 


அட்மின் மீடியா ஆதாரம்



அட்மின் மீடியா ஆதாரம்


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback

4 Comments

  1. இது போல இஸ்லாமியர்கள் மீது தொடர் அவதூறு சொல்பவர்களை அல்லாஹ் பார்த்து கொண்டு இருக்கிறான்

    ReplyDelete
  2. Admin Media

    Mashallah

    உங்களுடைய சேவை மிக சிறந்ததாக உள்ளது

    தொடருங்கள் இன்ஷா அல்லாஹ்

    ReplyDelete