Breaking News

வீட்டில் காவலர்களை தாக்கும் வீடியோ உண்மையா?

அட்மின் மீடியா
0
ஒரு வீடியோவில் பூஜை செய்யும் வீட்டில்  புகுந்து ஒருவரை போலிஸ் இழுத்து செல்வது போன்றும் அதனை பார்த்த அவரின் குடும்பத்தார் அந்த காவலரை திரும்பி தாக்குவது போன்று ஒரு வீடியோவையும் சமூகவளைதளத்தில் பலர் ஷேர் செய்கின்றார்கள்



அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

அந்த செய்தி பொய்யானது 

யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன

பஞ்சாபின் ஜலந்தரில் கான்டினென்டல் மல்யுத்த பொழுதுபோக்கு குழுவினர்கள் அவ்வப்போது இது போன்று யூடியூபில் பல வீடியோக்களை பதிவிட்டுள்ளனர்.

CWE உள்ள  மனிஷ் தூபே என்பவர்   காவலரின் பாத்திரத்தில் நடிக்கும் "சிங்கம் துபே" என்ற பாத்திரத்தை உள்ளடக்கிய பல வீடியோக்கள் உள்ளது .

வீடியோ வெவ்வேறு கேமரா கோணங்களில் இருந்து படமாக்கப்பட்டள்ளதை பார்த்தால் தெரியும்  இது தொழில் ரீதியாக படமாக்கப்பட்ட வீடியோ என்று

இது போன்ற ஒரு வீடியோவிற்க்கு நாம் ஏற்கனவே மறுப்பும் வெளியிட்டு இருந்தோம்

ஆகவே வீடியேவை பார்த்து அதில் நடக்கும் சம்பவத்துடன் பொய்யாக கற்பனை கலந்து பொய்யாக  பரப்புகின்றனர்


அட்மின் மீடியா ஆதாரம்



அட்மின் மீடியா ஆதாரம்



எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback