Breaking News

FACT CHECK இஸ்லாமியர்களை தவறாக சொன்னதற்க்காக செவிலியரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க சொன்ன கர்னூல் எம் எல் ஏ? உண்மை என்ன?.

அட்மின் மீடியா
0
இவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொண்டிருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது என்று சொன்ன செவிலியரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வற்புறுத்திய கர்னூல் MLA என்று ஒரு செய்தியுடன் ஓர் புகைபடத்தையும் ஷேர் செய்கின்றார்கள்



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேடக அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன


ஆந்திராவில் உள்ள ராயலசிமா பல்கலைகழகத்தில் உள்ள தனிமைபடுத்தபட்ட முகாமில் உள்ளவர்களை பார்க்க சென்ற அந்த பகுதி சட்டமன்ற உறுப்பினர் ஹாபிஸ்கான் அவர்கள் சென்ற போது அங்கு இருந்தவர்கள் பலரிடம் நலம் விசாரித்தார் அப்போது முதியவர் ஒருவர் வரும் போது கவனிக்காமல் அங்கிருந்த கம்பியில் இடித்து அவருக்கு காயம் ஏற்பட்டு இரத்தம் நிற்காமல் வந்துள்ளது .அப்போது அங்கு இருந்த செவிலியர் உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சைஅளித்தார் மேலும் அவருக்கு சர்க்கரை நோய் இருந்ததால் அவரை அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைகாக அனுப்பட்டார்.

அந்த புகைபடத்தை பலரும் கட்டுகதைகளோடு ஷேர் செய்கின்றார்கள்

அந்த சம்பவம் சம்மந்தமாக காவல்துறை சார்பாக அளிக்கப்பட்ட விளக்கம்
அட்மின் மீடியா ஆதாரம்



https://www.facebook.com/kurnoolpoliceofficial/posts/2808857455896956


 மேலும் அந்த செவிலியர் அது சம்மந்தமாக அளித்த விளக்கம் வீடியோவாக


https://www.facebook.com/watch/?v=924715211294892

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்....

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback