Breaking News

டாக்டர் ஹாதியா அலியின் கடைசி புகைபடமா இது? உண்மை என்ன

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து, இறுதியில் தனது மரணம் வெகு அருகில் என்பதை உணர்ந்து, தனது இரு மகள்களையும் கர்ப்பிணியான மனைவியையும் தொலைவில் நின்று இறுதி யாத்திரை கூறும் இந்தோனிஷிய (Dr.Hadio Ali) டாக்டர் .ஹாதியோ அலியின் புகைப்படத்தை அவரது கர்ப்பிணியான மனைவி படம் பிடித்துள்ளார்.. ஒரு அந்நிய நபரைப்போன்று தூரத்தில் நின்றே விடைபெறும் டாக்டர் தனது இறுதி சூழலிலும் குடும்பத்தினரை அருகில் வர அனுமதிக்கவில்லை..\ இந்த புகைப்படம் கூறும் செய்திகள் ஏராளம்....  என ஒரு புகைப்படத்தை  பலரும் ஷேர் செய்கின்றார்கள்




அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன

அவர் ஹாதியா அலி கிடையாது


அந்த புகைபடத்தில் உள்ளவர் மலேசியாவின் சிலாங்கூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வருகிறார். அவர் தன் குடும்பத்தாரை பார்க்க வீட்டிற்க்கு வரும் போது கொரானா சமூக பரவலை தடுக்க தூரம் இருந்து குடும்பத்தாரை பார்க்கும் போது எடுக்க பட்ட புகைப்படம் அது 

அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து அவரது அண்ணன் தனது பேஸ்புக் பக்கத்தில் அந்தனை கூறியுள்ளார் 

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்



அட்மின் மீடியாவின் ஆதாரம்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback