Breaking News

காலங்களின் செய்திகள் என்ற கிதாபில் எழுதப்பட்டுள்ள செய்தி உண்மையா?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் காலங்களின் செய்திகள் என்ற கிதாபில் எழுதப்பட்டுள்ள செய்தி  ஹிஜ்ரி 462 க்கு முன் எழுதப்பட்ட தகவல். என்று  ஒரு புகைப்படத்தையும் ஆடியோவையும்
ஷேர் செய்கின்றார்கள்


அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன

அந்த புத்தகத்தை  எழுதியவர்  அபு அல் ஹசன் அலி பின் அல்-ஹுசைன் பின் அலி அல்-மஸ்வூதி ஆவார்.

மேலும் காலம் பற்றிய புத்தகத்தில் 278 பக்கங்கள் மட்டுமே உள்ளது  அதில் ஒரு இடங்களில் கூட 2020 ம் ஆண்டு மார்ச் மாதம் பற்றியோ கொரானா வைரஸ் பற்றியோ  குறிப்பிடவில்லை


ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும் பொதுவாக அந்த கால இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் ஆங்கில மாதத்தை குறிப்பிடும் பழக்கமில்லை மாறாக அரபு மாதமாகிய ஹிஜ்ரி ஆண்டை தான் குறிப்பிடுவார்கள். ஆனால் அந்த ஆடியோவில் மார்ச் மாதம் என்று கூறுகின்றார்கள் இதுவே பொய் என்பதற்க்கு சிறந்த உதாரணம் ஆகும்

மேலும் அந்த காலத்தில் புத்தகங்களில் ஹிஜ்ரி ஆண்டுகளையும், இஸ்லாமிய மாதங்களை குறிப்பிட்டுதான் இருப்பார்கள் 

மேலும் அந்த செய்தியுடன் வரும் போட்டோவானது  போட்டோ ஷாப் எடிட்டிங் செய்யப்பட்ட புகைப்படம் ஆகும்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

இந்த செய்தி அரபு நாடுகளிலும் பரவி அதற்க்கு அங்கும் அந்த செய்தி பொய்யானது என மறுத்துள்ளார்கள் 


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback