Breaking News

கோழிகறியில் கொரானா வைரஸா? உண்மை என்ன

அட்மின் மீடியா
0
கொரனா வைரஸ் நெய்வேலியில் பிராய்லர் கடைகளில் உள்ள கோழிகளை தாக்கியது, என்று செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.






சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், கறிக்கோழி வழியாக கொரோனா வைரஸ் பரவும் என்று கூறப்படும் வதந்திகள் உருவாகின. அந்த வகையில் தமிழகத்தில் நெய்வேலியில் கொரோனா வைரசால் கோழி பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இந்த செய்தியை தயவு செய்து அனைவருக்கும் பகிரவும் மற்றும் கோழியை உண்பதை தவிர்க்கவும்.


என்ற ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது...இது உண்மையா என் அட்மின் மீடியா களம் கண்டது...

இல்லை....இது உண்மை இல்லை

யாரும் நம்பவேண்டாம் 

அப்படியானால் உண்மை என்ன

கொரோனா வைரஸ் என்பது காற்றின் மூலம் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியது.
மேலும் உலக சுகாதர அமைப்பு(WHO) -வின் அறிவிப்பு படி கோரோனா வைரஸ் என்பது எந்த விலங்கு மூலியமாக பரவுகிறது என்பது இதுவரை கண்டுபிடிக்கவில்லை

மேலும் கறிக்கோழிகளை கொரோனா தாக்கியதாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை என - கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்

மேலும் பிராய்லா் கறிக்கோழி பற்றி வதந்திகளை பரப்புவோா் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழு வலியுறுத்தியுள்ளது.




எனவே பொய்யான விஷயங்களை யாரும் ஷேர் செய்யாதீர்கள்...

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback