நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் விஜய்
சட்டப்பேரவையில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தனித் தீர்மானம் முன்மொழிந்து பேசிய மருத்துவத் துறை அமைச்சர் அருண்ராஜ்,
நீட் தேர்வு சமூக நீதி, சமத்துவம், மாநில உரிமைகளுக்கு எதிரானது என்று அமைச்சர் அருண்ராஜ் கூறினார். தமிழ் வழியில் பயிலும் மாணவர்கள், கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களுக்கு பெரும் பாதிப்பாக நீட் தேர்வு உள்ளது. நீட் தேர்வு நாடு முழுவதும் மாணவர்களின் நம்பிக்கையை இழந்துள்ளது. நீட் தேர்வு முறை அகற்றப்பட வேண்டும் என்று மருத்துவத்துறை அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.
நீட் தேர்வு நடைமுறையால் தனியார் பயிற்சி மையங்களே பலன் பெறுகின்றன.
கிராமப்புற அரசு பள்ளி மாணவர் விவசாயி பிள்ளைகள் அதே அளவிலான பயிற்சியை பெற முடியுமா? சமூக நீதியை பாதிக்கும் சமவாய்ப்பை குறைக்கும் எந்த ஒரு தேர்வையும் ஏற்க முடியாது என்பதே நம் கொள்கை என்று மருத்துவத்துறை அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.
பேரவையின் ஒருமித்த குரலை ஒன்றிய அரசு மதிக்க வேண்டும் மாநில உரிமையை மதிப்பதே கூட்டாட்சி கொள்கை என்று அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.இந்நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக மருத்துவத் துறை அமைச்சர் அருண்ராஜ் கொண்டு வந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய பா.ஜ.க எம்.எல்.ஏ போஜராஜன் தீர்மானத்திர்கு எதிர்ப்பு தெரிவித்தார். நீட் தேர்வு பயிற்சியை அரசே நடத்த வேண்டும் என வலியுறுத்திய பா.ஜ.க எம்.எல்.ஏ போஜராஜன் சட்டப்பேரவையில் இருந்தூ வெளிநடப்பு செய்தார்
Tags: தமிழக செய்திகள்
