Breaking News

பொறியியல் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் TNEA Registration 2026

அட்மின் மீடியா
0
தமிழகத்தில் பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு தொடக்கம்.

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பு பி.இ., பி.டெக் மற்றும் பி.ஆர்க் பொறியியல் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
அதன்படி, பி.இ., பி.டெக்., மற்றும் பி.ஆர்க் முதலாமாண்டு சேர்க்கைக்கு அரசு, அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் சேர மே மாதம் 3 ம் தேதி முதல் ஜூன் 2ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு, தமிழ்நாட்டில்‌ உள்ள அரசு /அரசு உதவி பெறும்‌ பொறியியல்‌ கல்லூரிகள்‌ / அண்ணா பல்கலைக்கழகம்‌ மற்றும்‌ அதன்‌ உறுப்புக்‌ கல்லூரிகள்‌ / அண்ணாமலை பல்கலைக்கழகம்‌ மற்றும்‌ சுயநிதி பொறியியல்‌ கல்லூரிகளால்‌ ஒப்படைக்கப்பட்ட இடங்களுக்கான சேர்க்கை பெற கீழ்க்கண்ட இணையதளத்தில்‌ பதிவேற்றம்‌ செய்ய ஏற்பாடு செய்யப்பட்‌டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிக்க: 

https://www.tneaonline.org 

https://www.tndte.gov.in

என்ற இணையதள வாயிலாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். 

ஆன்லைன் இல்லாமல் நேரில் தங்களின் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் TEA Faction Centere (TRC) அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது. 

மேலும், கலந்தாய்வு விவரங்கள், வழிகாட்டி, கால அட்டவணையை மாணவர்கள் இணைதளம் மூலம் அறிந்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம் - OC/BC/BCM/MBC@DNC ₹500, SC/SCA/ST ₹250.

அசல் சான்றிதழ் பதிவேற்ற கடைசி நாள் - ஜூன் 6 தேதி ஆகும்.

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback