தமிழகத்தின் புதிய சட்டம், ஒழுங்கு டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம் தமிழக அரசு உத்தரவு
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்
தமிழக காவல்துறையின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபி மற்றும் போலீஸ் படைத் தலைவராக (DGP & Head of Police Force) மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இவர், தனது தந்தையின் வழிகாட்டுதலில் சட்டம் படித்துவிட்டு, 1994ம் ஆண்டு தனது 22-வது வயதில் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று ஐபிஎஸ் அதிகாரியாகத் தன் காவல் பணியைத் தொடங்கினார்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் முக்கியப் பிரிவுகளிலும் திறம்படப் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. குறிப்பாக, தேனி மற்றும் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி, சென்னை பூக்கடை துணை கமிஷனர், போக்குவரத்து பிரிவு துணை கமிஷனர், மதுரை கமிஷனர், சென்னை தெற்கு மண்டல கூடுதல் கமிஷனர், சென்னை போலீஸ் கமிஷனர், டிஜிபி அலுவலகச் செயலாக்கப் பிரிவு ஏடிஜிபி மற்றும் தமிழக ஆயுதப்படை டிஜிபி எனப் பல பொறுப்புகளை வகித்துள்ளார்.
மேலும், சிபிஐ அதிகாரியாக 10 ஆண்டுகள் பணியாற்றியதுடன், போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு ஏடிஜிபியாகவும், டெல்லியில் எல்லை பாதுகாப்புப் படையின் (BSF) கூடுதல் இயக்குநராகவும் மிக உயரிய பொறுப்புகளைத் திறம்படக் கையாண்டுள்ளார்.
Tags: தமிழக செய்திகள்
