Breaking News

அ.தி.மு.க சார்பில் 2 அணிகள் - சட்டமன்றக் குழுத் தலைவர் யார்? சட்டப்பேரவை விதிகள் சொல்வது என்ன

அட்மின் மீடியா
0

அ.தி.மு.க சார்பில் 2 அணிகள் - சட்டமன்றக் குழுத் தலைவர் யார்? சட்டப்பேரவை விதிகள் சொல்வது என்ன




அதிமுக சட்டமன்ற குழுத் தலைவராக எஸ்பி வேலுமணியையும், சட்டமன்ற குழு துணைத் தலைவராக ஹரியையும், சட்டமன்ற கொறடவாக விஜய பாஸ்கரையும், சட்டமன்ற செயலாளராக ஆர்.காமராஜையும் நியமிக்கக் கோரி தற்காலிக சபாநாயகர் கருப்பையாவிடம் மனு வழங்கினர் சிவி சண்முகம் தலைமையிலான 30 பேர் கொண்ட அதிமுக எம்எல்ஏக்கள்.

முன்னதாக 17 பேர் கொண்ட அதிமுக எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமியை அதிமுக சட்டமன்ற குழுத் தலைவராக நியமிக்க வேண்டி ஆதரவு கடிதத்தை வழங்கியிருந்தனர்.

அ.தி.மு.க. சட்டமன்ற குழுத் தலைவர் யார் என்பதில் எடப்பாடி பழனிசாமி, வேலுமணி தரப்புக்கு இடையே போட்டி

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 17 எம்.எல்.ஏ.க்களும், வேலுமணிக்கு ஆதரவாக 30எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.

பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுள்ளவரே அக்கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவராவார் என்பது சட்டப்பேரவை விதி

அதிக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுள்ளவரே கட்சியின் கொறடாவாகவும் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பது சட்டப்பேரவை விதி

நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் சூழலில் அதிக எம்.எல்.ஏ. ஆதரவு உள்ள அணியின் கொறடா உத்தரவை கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் பின்பற்ற வேண்டும்

கொறடாவின் உத்தரவை மீறி செயல்படும் எம்.எல்.ஏ.க்கள் கட்சித் தாவல் தடை சட்டத்தின் படி தகுதி நீக்கம் செய்ய சட்டப்பேரவை விதியில் இடமுண்டு

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback