சத்தியம் டிவி-யின் 2026 தேர்தல் மெகா சர்வே கருத்துக்கணிப்பு ...யார் அடுத்த முதல்வர், விஜய்க்கு வாக்களிப்பவர்கள் யார் யார் முழு விவரம்
பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனமான சத்தியம் தொலைகாட்சி தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டு வருகிறது
சத்தியம் தொலைகாட்சி நேற்று இரவு வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் மாவட்ட வாரியாக ஒவ்வொரு தொகுதிகளிலும் கட்சிகளின் வெற்றி வாய்ப்புகளை அலசி உள்ளது
முதலமைச்சரின் செயல்பாடுகளுக்கு
13% பேர் மிகச்சிறப்பு என்றும்,
31% பேர் சிறப்பு என்றும்
42% சுமார் என்றும்,
11% பேர் மோசம் என்றும் கருத்துகளை தெரிவித்திருக்கின்றன.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வாக்குகள் யாருக்கு
20 சதவீதம் பேர் திமுகவுக்கு ஆதரவளிப்பதாக கூறியுள்ளனர். அதிமுகவிற்கு 15 சதவீதம் பேரும், தமிழக வெற்றிக்கழகத்திற்கு நான்கு சதவீதம் பேரும், நாம் தமிழர் கட்சிக்கு 3 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவிக்கின்றனர். மீதும் உள்ள 58 சதவீதம் பேர் அதிருப்தியில் இருப்பதாகவும் முடிவெடுக்கவில்லை என்றும் கூறியுள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சராக யார் வரவேண்டும்
மு.க ஸ்டாலின் முதலமைச்சராக வரவேண்டும் என்று 39 சதவீதம் மக்கள் வாக்களித்துள்ளனர்.
எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக வேண்டும் என்று 36 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று 13% பேர் தெரிவித்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சி சீமானுக்கு 7 சதவீதம் பேரின் ஆதரவு இருக்கிறது. மற்றவர்களின் பெயர்களை 5% பேர் குறிப்பிட்டுள்ளனர்.
கைபற்றும் தொகுதிகள்:-
திமுக கூட்டணிக்கு 105 இடங்களும்,
அதிமுக கூட்டணிக்கு 90 இடங்களும்
இழுபறியாக 39 இடங்களும் செல்லும்
39 தொகுதிகள் யார் பக்கம் செல்கிறதோ அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: அரசியல் செய்திகள்