டிகிரி படித்தவர்கள் குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் டி என் பி எஸ் சி அறிவிப்பு!
அட்மின் மீடியா
0
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கான அறிவிப்பை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு இன்று (ஜூலை 15) முதல் தொடங்குகிறது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள இரண்டாம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2, 2ஏ தேர்வை அறிவித்துள்ளது. மொத்தம் 645 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் நேர்முகத் தேர்வு அடங்கிய 50 பணியிடங்களும், நேர்முகத் தேர்வு அல்லாத 595 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. இந்த தேர்வுக்கு 13.08.2025 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
பணி:-
உதவி ஆய்வாளர்
கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மற்றும் சமூகப் பணியில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி:-
இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்
கல்வித் தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி:-
நன்னடத்தை அலுவலர்
கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். உளவியல் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
பணி:-
சார் பதிவாளர்
கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
பணி:-
தனிப்பிரிவு உதவியாளர்
கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
பணி:-
உதவிப் பிரிவு அலுவலர்
கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். இளநிலை சட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
பணி:-
வனவர்
கல்வித் தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி:-
முதுநிலை ஆய்வாளர் (கூட்டுறவு)
கல்வித் தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி:-
தணிக்கை ஆய்வாளர்
கல்வித் தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி:-
மேற்பார்வையாளர்/ இளநிலைக் கண்காணிப்பாளர்
கல்வித் தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி:-
உதவியாளர் நிலை III
கல்வித் தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி:-
உதவியாளர் (பல்வேறு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் உதவியாளர்கள்)
கல்வித் தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி:-
முதுநிலை வருவாய் ஆய்வாளர்
கல்வித் தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி:-
செயல் அலுவலர் (இந்து சமய அறநிலையத் துறை)
கல்வித் தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி:-
கீழ்நிலை செயலிட எழுத்தர்
கல்வித் தகுதி: இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்
வயது வரம்பு:-
01.07.2025 அன்று 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தமிழக அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
13.08.2025
மேலும் விவரங்கள் அறிய இங்கு கிளிக் செய்யவும்;-
https://tnpsc.gov.in/Document/tamil/GRP2_11_2025_TAMIL.pdf
Tags: வேலைவாய்ப்பு