Breaking News

11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஹால் டிக்கெட்டை 3ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். - தேர்வுத்துறை அறிவிப்பு.

அட்மின் மீடியா
0
11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஹால் டிக்கெட்டை 3ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.தேர்வுத்துறை அறிவிப்பு.



இது குறித்து தேர்வு துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:-

நடைபெறவுள்ள மார்ச்/ஏப்ரல் 2023, மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் தொடர்பாக, பள்ளி தலைமையாசிரியர்கள் 03.03.2023 அன்று பிற்பகல் முதல் www.dge1.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று "online-portal" என்ற வாசகத்தினை “Click" செய்து “HIGHER SECONDARY FIRST YEAR / SECOND YEAR EXAM MARCH/APRIL 2023" என தோன்றும் பக்கத்தில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள User ID, Password-ஐ கொண்டு தங்கள் பள்ளி மாணவர்களது தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுக்களை (Hall Tickets) பதிவிறக்கம் செய்தல் குறித்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களும் மேல்நிலை இரண்டாம் பொதுத் தேர்வுகளுக்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகளை ஆண்டு மேற்குறிப்பிட்டுள்ள நாட்களில் தவறாமல் பதிவிறக்கம் செய்துகொள்ளவேண்டும். இதற்கு அனைத்து தலைமையாசிரியர்கள் ஒத்துழைப்பு அளிக்க அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback