Breaking News

ஹஜ் பயணிகள் இனி சென்னையில் இருந்து புறப்படலாம் - ஹஜ் யாத்திரை புதிய கொள்கை வெளியீடு haj news

அட்மின் மீடியா
0

இஸ்லாமியர்களின் கடமைகளில் புனித ஹஜ் பயணம் ஒன்றாகும், கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு 10 விமான நிலையங்களில் இருந்து மட்டும் ஹஜ் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டது. சென்னையில் இருந்து புறப்படுவது நீக்கப்பட்டது.சென்னையில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டன.


இந்நிலையில் சென்னையில் இருந்து ஹஜ் பயணம் செல்ல மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் புனித ஹஜ் பயணத்திற்கான புறப்பாடு இடங்களில் சென்னையும் சேர்க்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்:-

ஹஜ் பயணத்துக்கான இடங்களில் 80 சதவீதம் ஹஜ் கமிட்டிகளுக்கும், 20 சதவீதம் தனியாா் நிறுவனங்களுக்கும் ஒதுக்கப்படும். 

ஏற்கெனவே ஹஜ் கமிட்டி மூலம் பயணம் மேற்கொண்டவா்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படாது. 

ஹஜ் பயணத்துக்கான ரூ.300 மதிப்பிலான விண்ணப்ப கட்டணம் இந்த வருடம்  இல்லை.

ஹஜ் பயணிகளின் திட்ட செலவு மதிப்பீட்டில் ரூ.50 ஆயிரம் வரை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

45 வயதுக்கு மேற்பட்ட பெண் பயணிகளுக்கு ஆண் துணை (மெஹரம் ) இல்லையென்றாலும் அவா்கள் குழுவாக செல்ல அனுமதிக்கப்படுவாா்கள்.

ஹஜ் பயணிகளுக்கு அருகே உள்ள விமான நிலையங்களில் இருந்து புறப்பட இடம் ஒதுக்கப்படும். 

அதன்படி சென்னை, கண்ணூா், கொச்சி, விஜயவாடா, ஹைதராபாத், பெங்களூரு, ஆமதாபாத், லக்னெள, அகா்தலா, காலிகட், கொல்கத்தா, மும்பை, தில்லி, நாகபுரி, ஜெய்ப்பூா், வாராணசி, ஒளரங்காபாத், கோவா, மங்களூா், போபால், இந்தூா், குவாஹாட்டி, கயை, ராஞ்சி, ஸ்ரீநகா் ஆகிய 25 விமான நிலையங்களில் இருத்து பயணிகள் புறப்படலாம். என அறிவிக்கப்பட்டுள்ளது.


No application fees for Haj

Haj news

Tags: இந்திய செய்திகள் மார்க்க செய்தி

Give Us Your Feedback