Breaking News

சாதாரண டிக்கெட்டிலும் முன்பதிவு பெட்டியில் பயணிக்கலாம்! எப்படி!! எந்த எந்த ரயில்கள் முழு விவரம் unreserved ticket

அட்மின் மீடியா
0

சாதாரண ரயில் டிக்கெட் எடுத்தாலும் இனி முன்பதிவு பெட்டியில் அமர்ந்து செல்லும் வசதியை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. சாதாரண டிக்கெட் வாங்கி  முன்பதிவு பெட்டியில் பயணிப்பது எப்படி என்பதை இங்கு பார்ப்போம்

 


முன்பதிவு இல்லாத சாதரண டிக்கெட்:-

பொதுவாக குறுகிய தூரப் பயணிகள் வழக்கமாக முன்பதிவு இல்லாத சாதரண டிக்கெட் எடுத்து ரயிலில் பயணிப்பார்கள், இவர்கள் முன்பதிவு செய்யாத பெட்டிகளில் மட்டுமே பயணிக்க முடியும்.

ஒரு சிலர் சாதரண டிக்கெட் எடுத்துவிட்டு அன் ரிசர்வ்ட் பெட்டியில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் முன்பத்வு பெட்டியில் பயணிப்பார்கள்


டிரிசர்வ்டு டிக்கெட்

 

விரைவு ரயில்களின் ஒரு சில முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்யும் வசதியை நடைமுறைப்படுத்தி தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

மேலும் இந்த வசதியை  பகல் நேரத்தில் ரயிலில் பயணிக்கும் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும்

டிரிசர்வ்டு பெட்டிகளில் பயணிக்கும் பயணிகள் அதிகபட்சமாக 100 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கலாம். 

டிரிசர்வ்டு டிக்கெட் பயணிகளுக்காக முன்பதிவு பெட்டிகளில் இருக்கும் ரயில்களில் 'டிரிசர்வ்டு'  பெட்டிகளை  இணைத்திருக்கிறது 

இந்த டிக்கெட்டுகள், சாதாரண டிக்கெட்டுகளை விட ரூ.20 மட்டுமே அதிகமாக இருக்கும்

 

ரயில்கள் பட்டியல்:-

சென்னை எழும்பூர் - கொல்லம் அனந்தபுரி ரயில்களில் டிரிசர்வ்டு பெட்டிகள் இருக்கும்.

எழும்பூர் - ராமேஸ்வரம் விரைவு ரயிலில் டிரிசர்வ்டு பெட்டிகள் இருக்கும்.

திருநெல்வேலி - கொல்லம் ரயிலில்  டிரிசர்வ்டு பெட்டிகள் இருக்கும்.

அதேபோல் கொல்லம் - திருநெல்வேலி  ரயிலில்  டிரிசர்வ்டு பெட்டிகள் இருக்கும்.

மானாமதுரை - ராமேஸ்வரம் வரை ரயிலில்  டிரிசர்வ்டு பெட்டிகள் இருக்கும்.

அதேபோல் ராமேஸ்வரம் - மானாமதுரை வரை ரயிலில்  டிரிசர்வ்டு பெட்டிகள் இருக்கும்

மங்களூர் விரைவு ரயிலில் திருச்சி - மங்களூர் வரை டிரிசர்வ்டு பெட்டிகள் இருக்கும்

அதேபோல் மங்களூர் விரைவு ரயில் எழும்பூர் திரும்பும் போது டிரிசர்வ்டு பெட்டி இருக்கும்.

ூத்துக்குடி - மைசூர் இடையேயான விரைவு ரயிலில் தூத்துக்குடி - மதுரை வரை டிரிசர்வ்டு பெட்டிகள் இருக்கும்

அதேபோல் தூத்துக்குடி - மைசூர் இடையேயான விரைவு ரயிலில்  மதுரை - தூத்துக்குடி வரை டிரிசர்வ்டு பெட்டிகள் இருக்கும்

கன்னியாகுமரி - பெங்களூர் ரயிலில் கன்னியாகுமரி - எர்ணாகுளம் வரை டிரிசர்வ்டு பெட்டிகள் இருக்கும்.

அதேபோல் கன்னியாகுமரி - பெங்களூர் ரயிலில் எர்ணாகுளம் முதல் கன்னியாகுமரி -வரை டிரிசர்வ்டு பெட்டிகள் இருக்கும்.

நாகர்கோவில் விரைவில் ரயிலில் திருநெல்வேலி - நாகர்கோவில் வரை டிரிசர்வ்டு பெட்டிகள் இருக்கும்.

அதேபோல் நாகர்கோவில் விரைவில் ரயிலில் நாகர்கோவில் இருது திருநெல்வேலி வரை டிரிசர்வ்டு பெட்டிகள் இருக்கும்

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback