Breaking News

நாடு முழுவதும் 19ம் தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

19ம் தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு



இது குறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்

வங்கி கிளைகளில் எங்கு கூடுதல் ஊழியர்கள் உள்ளார்களோ அவர்களை ஊழியர் பற்றாக்குறை உள்ள வங்கி கிளைகளுக்கு மாற்ற வேண்டும். இதன் மூலம் அனைத்து கிளைகளிலும் சமமான ஊழியர்கள் இருப்பர். ஆனால், சில வங்கிகள் இந்த ஒப்பந்தத்தை மீறி ஊழியர்களை ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு பணியிட மாற்றம் செய்கிறது.  இது தொழிலாளர் சட்டத்தை மீறும் செயலாகும்.

10-ந் தேதி டெல்லியில் தலைமை தொழிலாளர் நலத்துறை ஆணையருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், வங்கிகளின் நிர்வாக தரப்பில் யாரும் பங்கேற்கவில்லை. இதற்கிடையே, தலைமை தொழிலாளர் நலத்துறை ஆணையரின் கோரிக்கையை ஏற்று இன்று (நேற்று) வங்கிககள் கூட்டமைப்புடன் மீண்டும் ஒரு சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இப்பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், ஏற்கனவே திட்டமிட்டப்படி வரும் 19-ந் தேதி நாடு தழுவிய அளவில் ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டு உள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback