Breaking News

ஞானவாபி மசூதியில் உள்ள சிவலிங்கத்தின் காலத்தை கண்டறிய கார்பன் டேட்டிங் சோதனை செய்யவேண்டும் -மனு தாக்கல்

அட்மின் மீடியா
0

ஞானவாபி மசூதியில் உள்ள சிவலிங்கத்தின் காலத்தை கண்டறிய சோதனை செய்ய முஸ்லிம் அமைப்புகளுக்கு நோட்டீஸ்


உத்திரபிரதேசம் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தின் சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மனை தினமும் வழிபட அனுமதிக்க வேண்டும் என வாரணாசி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். 

இந்த வழக்கு விசாரணையில், ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ பதிவுடன் கள ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை தாக்கல் செய்ய வாரணாசி கோர்ட்டு உத்தரவிட்டது. ஞானவாபி மசூதி வளாகத்தில் சிவலிங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. 

ஆனால்  ஞானவாபி மசூதிக்குள் உள்ளது சிவலிங்கம் அல்ல என்றும் அது செயற்கை நீரூற்று அமைப்பு இவர்கள் சிவலிங்கம்னு சொல்றது, தொழுகைக்கு பள்ளிவாசல் செல்பவர்கள் கை கால் முகம் கழுவ பயன்படுத்தும் ஹவுது என்ற சிறிய நீர் தொட்டிக்கு நடுவில் அலங்காரத்துக்கு இருக்கும் நீரூற்று போன்ற கல்லை தான் அனைத்து மசூதியிலும் செயற்கை நீரூற்று அமைப்பு இருக்கும் என மசூதி தரப்பில் கூறப்பட்டது கூறினார்கள்,மேலும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது  

மேலும் வாரணாசி மாவட்ட நீதிமன்றமே இது குறித்து விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, சில தினங்களுக்கு முன் இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், மசூதிக்கு எதிரான மனுக்கள் விசாரணைக்கு உகந்தவைதான் என தீர்ப்பு வழங்கியது. 

இந்நிலையில், ஞானவாபி மசூதி தொடர்பான பிரதான வழக்கு, வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'மசூதிக்குள் இருக்கும் சிவலிங்கத்தின் காலத்தை கண்டறிய, 'கார்பன் டேட்டிங்' சோதனைக்கு உட்படுத்த அனுமதிக்க வேண்டும்,' என இந்து அமைப்புகள் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதிலளிக்கும்படி இஸ்லாமிய அமைப்புகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும், விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Tags: இந்திய செய்திகள் மார்க்க செய்தி

Give Us Your Feedback