காவல்நிலையத்தில் கைதிகளிடம் இரவில் விசாரணை செய்ய வேண்டாம்: டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு
அட்மின் மீடியா
0
விசாரணைக் கைதிகளை இரவு நேரங்களில் காவல் நிலையங்களில் வைத்து விசாரணை நடத்தக் கூடாது என்று அனைத்து மாவட்ட போலீஸாருக்கும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்
அனைத்து மாவட்ட காவல் உயரதிகாரிகளுக்கு தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்
விசாரணைக் கைதிகளை இரவு நேரங்களில் காவல் நிலையங்களில் வைத்து விசாரணை நடத்தக் கூடாது. குற்றம் உறுதி செய்யப்பட்டால் கைது செய்யப்பட்டவர்களை மாலை 6 மணிக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட காவல் ஆணையர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு (எஸ்.பி.) டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது
Tags: தமிழக செய்திகள்