Breaking News

மே 26 முதல் இதற்கும் பான், ஆதார் எண் கட்டாயம் !

அட்மின் மீடியா
0

மே 26 முதல் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளில் இருந்து ஒரு நிதியாண்டில் ரூ.20 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை டெபாசிட் செய்தாலோ அல்லது எடுத்தாலோ பான் அல்லது அல்லது ஆதார் எண்ணை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என மத்திய மறைமுக வரிகள் வாரியம் (CBDT) அறிவித்துள்ளது.

 



இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) வெளியிட்ட அறிவிக்கையில் 

வங்கிகளில் ஒரு நிதியாண்டில் அதிக பணத்தை எடுக்கும் அல்லது செலுத்தும் வாடிக்கையாளா்கள் தங்களது நிரந்தர கணக்கு எண் அல்லது ஆதாா் எண் ஆகியவற்றை தெரிவிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும், வங்கி அல்லது அஞ்சல் அலுவலகங்களில் நடப்பு கணக்குகளைத் தொடங்கி ரொக்கப் பரிவா்த்தனை மேற்கொள்வதற்கும் ஆதாா் மற்றும் பான் எண்ணை தெரிவிப்பதும் கட்டாயமாகும்.

.அதே சமயம்,வணிக வங்கியில் மட்டுமின்றி கூட்டுறவு வங்கி அல்லது தபால் நிலையங்களிலும் கணக்குகள் தொடங்குபவர்கள் மற்றும் ஏற்கனவே கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் இந்த விதிமுறை பொருந்தும்.

ஒரு நிதியாண்டில் வங்கிகளிலிருந்து ரூ.20 லட்சம் அல்லது அதற்கு மேல் எடுக்கும் அல்லது செலுத்தும் பரிவா்த்தனைகள் குறித்து, கூட்டுறவு சங்கங்கள், அஞ்சல் அலுவலகங்கள், வங்கிகள் உள்ளிட்டவை தகவல்களைத் தெரிவிக்க வேண்டும் என சிபிடிடி தெரிவித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback