Breaking News

ஊரடங்கில் கூடுதல் கட்டுபாடுகளா? தளர்வுகளா? முதல்வர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை!

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் அடுத்த கட்ட ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பாக இன்று காலை அதிகாரிகரிகளுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.



தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

தமிழகத்தில் தொற்று பரவல் எண்ணிக்கை என்பது 30 ஆயிரத்தை கடந்து பதிவாகி வந்தது. அதே சமயம் நேற்று 29 ஆயிரத்து 976 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. எனவே கொரானா பரவலை கட்டுபடுத்த ஏற்க்கனவே ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

ஜனவரி 31-ஆம் தேதி வரை இந்த கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 

அடுத்தகட்ட ஊரடங்கு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை உயர் அதிகாரிகரிகளுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ,தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

முழு ஊரடங்கு, இரவு ஊரடங்கு நீடிப்பது குறித்தும், பள்ளிகள் திறப்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இந்த ஆலோசனைக்குப் பின் இரவு நேர ஊரடங்கு நீட்டிக்கப்படுமா..? என்பது தெரியவரும்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback