Breaking News

FACT CHECK: கொரானா தடுப்பூசி செலுத்திய மணமகன் தேவை என நியூஸ் பேப்பர் விளம்பரம் உண்மையா? முழு விவரம்....

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  ஆங்கில செய்தித்தாள் ஒன்றின் சிறிய பக்கத்தை ஷேர் செய்து வருகின்றார்கள் அந்த பேப்பரில் மணமகன் தேவை என்ற விளம்பரத்தில் பெண்ணிற்கு கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் போடப்பட்டுள்ளது, எனவே கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்ட மணமகன் தேவை என விளம்பரம் உள்ளது அந்த செய்திதாளை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள்.



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

பலரும் ஷேர் செய்யும் அந்த விளம்பரம் உண்மையானது இல்லை. அதுபோல் எந்த செய்திதாளிலும் விளம்பரம் வரவில்லை

பலரும் ஷேர் செய்யும் அந்த செய்திதாள் போல் நாம் எந்த செய்தி வேண்டுமானாலும் டைப் செய்தால் அது போல் அளிக்கும் ஒரு இணையதளம் ஆகும்

நீங்கள் fodey.com எனும் இணையதளத்தில் சென்று உங்களுக்கு வேண்டியதை டைப் செய்து அது போல் செய்திதாள் உருவாக்கலாம்

எடுத்துகாட்டாக நம் அட்மின் மீடியா உருவாக்கிய செய்திதாள் கீழே




பலரும் ஷேர் செய்யும் அந்த வதந்தி மணமகன் தேவை விளம்பரத்திலும் , நம் அட்மின் மீடியா உருவாக்கிய விளம்பரத்திலும்  வலது ஓரத்தில் காண்பிக்கும் எழுத்துக்கள் பொதுவாகவே வருகின்றன. 


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Share this