Breaking News

புதுச்சேரியில் பாமக தனித்துப் போட்டி அதிகாரபூர்வ அறிவிப்பு

அட்மின் மீடியா
0

.புதுவை சட்டப்பேரவைத் தேர்தலில், என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையே இன்று காலை கூட்டணி உறுதியாகி, தொகுதி பங்கீட்டில் கையெழுத்தானது. 


  அதில், என்.ஆர்.காங்கிரஸுக்கு 16 தொகுதிகளும், மீதமுள்ள 14 தொகுதிகள் பாஜக கூட்டணி கட்சிகளுக்கு பிரித்துக் கொடுக்கப்படும் என ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

இந்நிலையில், பாஜக மேலிடப் பொறுப்பாளர் சுரானா, பாமகவிற்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து அறிவிக்கப்படாததால், பாமக தனித்து போட்டியிடும் என்றும்  புதுச்சேரியில் 12 தொகுதிகள் மற்றும் காரைக்காலில் 3 தொகுதிகளில் பாமக  போட்டியிடும் என பாமக மாநில அமைப்பாளர் தன்ராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்.


Tags: இந்திய செய்திகள்

Share this