Breaking News

No ஆன்லைன் கிளாஸ்: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தீபாவளி விடுமுறை அறிவிப்பு!

அட்மின் மீடியா
0

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தீபாவளி பண்டிகையையொட்டி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 


கொரானா வைரஸ்  பரவலை கருத்தில் கொண்டு தமிழகத்தில் பள்ளிகள் கடந்த 7 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. இருப்பினும் அரசு , தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் தொடர்ந்து பாடம் எடுக்கப்பட்டு வருகிறது. 

 

மேலும் 16 ம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில்  எதிர்ப்பு காரணமாக பள்ளிகள் திறக்கும் முடிவு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் தீபாவளி பணிக்கையொட்டி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று முதல் 4 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Share this