Breaking News

FACT CHECK : இஸ்லாமிய குடும்பம் மீது வேண்டும் என்றே கார் ஏற்றினார்களா? உண்மை என்ன

அட்மின் மீடியா
3
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்கலில் பலரும்  உத்தரப் பிரதேசத்தில் முஸ்லிம்கள் மீதுள்ள வெறுப்பின் காரணமாக  காரைக் கொண்டு ஒரு முஸ்லிம் பெண்ணையும்  அவருடைய குழந்தையும் கொள்கிறார்கள் என்று ஒரு ஆடியோவுடன் ஒரு வீடியோவையும் பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 




அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன



இந்த சம்பவம் கடந்த 26.04.2020 ஆம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள  பல்லியாவில் நடந்தது

மேலும் அந்த விபத்தில்  தாய்-மகள்  வீட்டுக்கு வரும் போது எதிர்பாராத விதமாக  கார் மோதியதால் தாய்-மகள்  இரண்டு பேரும் மரணமடைந்தார்கள்.

முக்கியமாக இந்த விபத்தில் இறந்தவர்கள் முஸ்லிம்கள் இல்லை


இந்த விபத்தில் இறந்தவர்கள் இரண்டு பேரும் இந்துக்கள் மேலும் காரை ஓட்டி வந்தவரும்   இந்துக்கள்.

காரை ஓட்டுவதற்கு பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது இந்த விபத்து நடந்துள்ளது அவர்களை காவல்துறை கைது செய்து விட்டார்கள்

ஆனால் சிலரோ இந்து முஸ்லிம் மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்த இது போன்ற விஷயங்களை சமூக வலைத்தளங்களில் தவறான தலைப்புகளில் பரப்பி வருகிறார்கள் எனவே உண்மை தன்மை தெரியாமல் எந்த விஷயத்தையும் உணர்ச்சிவசப்பட்டு பொய்யான செய்தியினை பார்வேர்ட் செய்ய வேண்டாம்

அட்மின்  மீடியா ஆதாரம்
அந்த கார் விபத்தின் முழு  வீடியோ


அட்மின்  மீடியா ஆதாரம்
அந்த சம்பவம் குறித்து news 18 இந்தியில்  வந்த செய்தி

https://www.youtube.com/watch?v=_42Dii5AO_M&feature=youtu.be&t=5

அட்மின்  மீடியா ஆதாரம்

https://www.amarujala.com/uttar-pradesh/ballia/mother-daughter-death-due-to-car-hit-in-ballia-accident-while-returning-home-after-working-with-brick-kiln

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்


Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback

3 Comments