Breaking News

லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் போராட்டம்! தமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலங்கள் முற்றுகை

அட்மின் மீடியா
0
குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி சென்னையில் இஸ்லாமிய அமைப்புகள் தடையை மீறி சட்டசபை முற்றுகை போராட்டம் நடத்தி வருகிறார்கள்




இந்த சூழலில் தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலங்களை முற்றுகையிடும் போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள்


திருப்பூர் மாவட்டம்  பழைய பேருந்து நிலையம், தென்னம்பாளையம் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றனர். அங்கு தடுத்து நிறுத்த பட்ட அவர்கள் அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்


நெல்லை மாவட்டம்  மேலப்பாளையத்தில் குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக  கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. மேலும் கொக்கரகுளத்தில் உள்ள  அங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன போராட்டம் நடத்தினார்கள்


திருப்பத்தூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாகை  மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


திருவண்ணாமலை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஏராளமான இஸ்லாமியர்கள் பேரணியாக செல்கின்றனர். 

நீலகிரி மாவட்டம் ஊட்டியை உலுக்கிய மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முற்றுகை போராட்டம்  
நடத்தப்பட்டது அதன்பின்பு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டம்
விளமல்பாலத்திலிருந்து ஆட்சியர் அலுவலகம்நோக்கி சுமார் மூன்றுகிலோமீட்டர் பேரணியாக சென்று ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது

கடலூர்  மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஏராளமான இஸ்லாமியர்கள் பேரணியாக சென்றவர்கள் தடுத்து நிறுத்தப்படாதால் அங்கு வாக்குவாதம்


கோவை மாவட்டம் உக்கடம் ஆற்றுப்பாலம் உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஆயிரக்கணக்கானோர் ஊர்வலமாக நடந்து வருகின்றனர்.


திண்டுக்கல்  மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஆயிரக்கணக்கானோர் ஊர்வலமாக நடந்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் காளிங்கராயன் விருந்தினர் மாளிகையில் இருந்து ஊர்வலமாகச் சென்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்ததுக்கு ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஏராளமான இஸ்லாமியர்கள் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 


மதுரை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் குழந்தைகள் என ஏராளமான இஸ்லாமியர்கள் பேரணியாக செல்கின்றனர்.


திருச்சி மாவட்டம் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்


கரூர் மாவட்டம்  தான்தோன்றி மலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு  இஸ்லாமிய கூட்டமைப்பினர் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி  போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணியில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கு பெற்று குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்


தென்காசி மாவட்டம் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தென்காசி  மேம்பாலம் அருகில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில்  கண்டண ஆர்ப்பாட்டம் நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய மணு அளித்தார்கள் இதில் பெண்கள் குழந்தைகள் முதியவர்கள்   பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்


கள்ளகுறிச்சி மாவட்டம் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யவும் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி  கச்சராபாளையம் சாலையில் உள்ள ஈத்கா பள்ளிவாசலில் இருந்து தொடங்கப்பட்ட பேரணி  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்


விழுப்புரம் மாவட்டம்  ஆட்சியர் அலுவலகம் எதிரே இஸ்லாமிய கூட்டமைப்பினர் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் மாவட்டம்  ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் முற்றுகை போராட்டம் நடைபெற்றது  இஸ்லாமிய கூட்டமைப்பினர் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு அதன்பின்பு மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது


விருதுநகர் மாவட்டம்  ஆட்சியர் அலுவலகம் அருகே குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக இஸ்லாமியர்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற இஸ்லாமிய அமைப்பினரை மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகே போலீஸார் தடுத்து நிறுத்தினர்.


குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக தமிழகம்  முழுவதும்  தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன. தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback