Breaking News

செவ்வாழை சாயம் பூசுறாங்களா வைரல் வீடியோவின் உண்மை என்ன?

அட்மின் மீடியா
4
செவ்வாழையில் சாயம் பூசுறாங்க என்று சமூக வலைதளங்களில் பலரும் ஓர் வீடியோவை ஷேர் செய்து வருகின்றார்கள் அந்த வீடியோவில் ஒரு செவ்வாழை பழத்தினை பாத்திரம் துலக்க பயன் படும் சோப்பினை வைத்து தேய்கின்றார்கள் அந்த பழம் கலர் மாறி  மஞ்சள் கலரில் வருகின்றது உடனே அந்த பழம் சாயம் பூசபட்டு உள்ளது என்று கூறி செவ்வாழை பழத்தை  வாங்கும் போது செக் பன்னுங்க என்று கூறுகின்றார்கள் அந்த வைரல் வீடியோவின் உண்மை என்ன?



அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



 அப்படியானால் உண்மை என்ன?

அந்த பழம்  செவ்வாழை தான். 

சிவப்புச் சாயம் பூசியிருந்தால் கழுவிய தண்ணீர் சிவப்பாக மாறியிருக்க வேண்டும்.

செவ்வாழை முதிர்ந்து பழுக்கும் போது ஆந்தோசயனின் (சிவப்பு நிறமி) தோலின் மேலடுக்கில் மட்டும் தான் உற்பத்தியாகிறது.

இவ்வாறு சுரண்டி எடுக்கும் போது உட்புறத்திலுள்ள மஞ்சள் திசுக்கள் வெளிப்படுகிறது.

மேலும் சோப்பிலுள்ள சோடியமோ அல்லது பொட்டாசிமோ சிவப்பு நிற ஆந்தோசயனின் நிறமியுடன் வினைபுரிந்து அதை வெளுத்து விடுகிறது.

எனவே பொய்யான செய்தியினை நம்பாதீர்கள்

செவ்வாழை பழம் உடலுக்கு நல்லது ஆகும் யாரோ வேண்டும் என்றே பொய்யான கருத்தை கூறி வதந்தி பரப்புகின்றார்கள்

மேலும் அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் படிக்க, அட்மின் மீடியா  மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து டவுன் லோடு செய்துகொள்ளுங்கள்!

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback

4 Comments